#மார்க்சிய_படிப்பு_வட்டம்_மதுரை
காவிக் கருத்தியலுக்கு முடிவுகட்டுகிறது அறிவியல்!
=============================
வரலாற்றுப் பொருள்முதல் வாதம் வகுப்பு (2)ன் நோக்கங்களில் ஒன்று இது. மரபான மார்க்சியப் புரிதலுடன் பின்வருவனவற்றை இணைக்க வேண்டும் என்ற நோக்கில், இதுவரை பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து வந்தோம். அந்தத் தகவலின் சாரம் இதுதான்:
நாம் எல்லோரும் வந்தேறிகள்... ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்தவர்கள். அதே சமயம் ...
//சமஸ்கிருதம் என்ற மொழியுடன், அத்துடன் சம்பந்தப்பட்ட நம்பிக்கைகளுடன் வந்தவர்கள் நமது சமூகத்தை அடிப்படையான அம்சங்களில் வழிகளில் மாற்றியமைத்தனர்.//
அதாவது, சமஸ்கிருதப் பின்புலமுள்ளவர்கள், இந்துத்துவம் என்ற பிராமணியம் என்ற பிற்போக்கை நம் தலையில் கட்டினர். அதுதான் இன்றைக்கு நம்முன்னுள்ள பிரதானப் பிரச்சனையாகவும் இருக்கிறது. அதனை உதறித் தள்ள வேண்டும். ஆப்பிரிக்காவில் இருந்து துவங்கி, பல்வேறு அலைகளாக இந்தியா என்று இன்று அறியப்படும் பரப்புக்கு வந்து, பல்வேறு போக்குகளின் செழுமையான கலவையான மானுடம் என்ற நம் இருத்தலை, சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பாவது மீட்டெடுக்க வேண்டும். மானுடமாக முன்னேற வேண்டும் என்ற செய்தியை மரபணு அறிவியலைப் பயன்படுத்தி முன்னேறிய மனித அறிவு காட்டுகிறது.
கீழே உள்ளது சமீபத்திய மரபணு முறையிலான மனிதப் பரவல் பற்றிய ஒரு கட்டுரையின் இறுதிப் பகுதி. இந்தக் கட்டுரை Tony Joseph என்பவரால் எழுதப்பட்டு ஜூன் 16, 2017 The Hindu நாளிதழில் வெளியானது. அதற்கான தொடுப்பு http://www.thehindu.com/…/how-genetics-…/article19090301.ece
இந்தக் கட்டுரையின் தமிழ் வடிவம் சாரம் கீழைக்காற்று பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல். அதன் பிரதிகள் 10 நவம்பர் வகுப்பில் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ரூபாய் 30 அனைவரும் கொண்டுவர வேண்டும். “பொருள்“ முதல் வாதம் முக்கியம் தோழர்களே..!
The Hinduவில் Tony Joseph எழுதிய கட்டுரையின் நிறைவுரை கீழே:
மிக அதிகமான ஆதாரங்களுடன் தெரியும் செய்தி என்னவென்றால்... நமது (இந்திய துணைக் கண்ட மக்கள் அனைவரின்) நாகரீகம் பல்வேறு நாகரீகங்களின் கலவை. நமக்கு மூலம் என்று ஒன்றே ஒன்று இருந்திருக்கவில்லை. நமது கலாச்சாரத்தைப் பண்டைய தொல் சமூகங்கள் பலவற்றிடமிருந்து பெற்றிருக்கிறோம். நமது பல்வகைப்பட்ட முன்னோர்கள் அதனை அளித்திருக்கிறார்கள். நமது வரலாற்றுக்குப் பின்னால், புலம் பெயர்ந்த பற்பல வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய முன்னோடியான, பயமற்ற தேடல் வெறியுள்ளவர்கள் இந்த பூமியை முதலில் கண்டுபிடித்தனர். இந்த பூமியில் தங்கி வாழத் துவங்கினர். அவர்களின் பரம்பரை அடையாளம்தான் நமது அடிப்படை அடையாளமாக இருக்கிறது.
பின்னர், விவசாய அறிவுடன் வந்தவர்கள் சிந்து சமவெளி நாகரீகத்தைப் படைத்தார்கள். அவர்களின் பண்பாட்டு கருத்துகள் நமது பாரம்பரியத்தை இன்றைக்கு வரைக்கும் செழுமை படுத்தியிருக்கின்றன.
அதன்பின் கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தவர்கள், அனேகமாக நெல் விவசாயத்தையும் அத்துடன் சம்பந்தப்பட்ட மற்றவற்றையும் அவர்களுடன் கொண்டு வந்தனர்.
அதன் பின், சமஸ்கிருதம் என்ற மொழியுடன், அத்துடன் சம்பந்தப்பட்ட நம்பிக்கைகளுடன் வந்தவர்கள் நமது சமூகத்தை அடிப்படையான அம்சங்களில் வழிகளில் மாற்றியமைத்தனர்.
அதன்பின் வணிகக் காரணங்களுக்காக வந்தவர்கள், ஆக்கிரமிப்பு செய்ய வந்தது இங்கே குடியேறியவர்கள் என அனைவரும் தங்களுக்குள் கலந்து, இந்தியர்கள் (இந்திய துணைக் கண்டத்தினர்?) என்று இன்று அறியப்படும் நாகரீகத்திற்குப் பங்களிப்பு செய்துள்ளார்கள்.
சுருக்கமாக, நாமெல்லாம் வந்தேறிகள்.
(ஒரே கண்டப் பகுதியில் வாழ நேர்ந்த மானுடர்கள்..)
அடைப்புக் குறிக்குள் உள்ளவை மேம்பட்டப் புரிதலுக்காக நாம் சேர்த்தவை.
Friday, 12 January 2018
மார்க்சிய படிப்பு 10
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment