#மார்க்சிய_படிப்பு_வட்டம்_மதுரை
==================================
சங்க இலக்கிய காலத்தைப் படிப்பது குறித்து
++++++++++++++++++++++++++++++++
பிரபஞ்ச விதிகள் உயிர் தோற்றத்தின் விதிகளையும் தீர்மானித்ததைப் பார்த்தோம். அதுபோல, மனித சமூக வளர்ச்சியிலும், பல்வேறு பிராந்தியங்களிலும் ஒன்றே போல இவ்விதிகள் (பிரதேச / பிரதேச வர்ச்சியின் வேறுபாடுகளுக்கு ஏற்ப செயல்படுவதைப் படிப்பது அவசியமாகும். இதன் காரணமாகவே, தமிழரின் துவக்க கால இலக்கியங்கள் குறித்த பதிவுகள் இடப்பட்டன. இப்பிரச்சனையில் முன்னோடி தமிழ் ஆய்வாளரும் பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனின் மாணவருமான க. கைலாசபதியின் ஆய்வுகள் மிக முக்கியமானவை. புதிலின் துவக்கமாக ஒரு மேற்கோள் மட்டும் கீழே.
====================================
(குறிப்பு: வீரயுகம் என்பது, கூட்டுச் சமூகமாக இருந்த நிலையிலிருந்து , வாரிசுரிமை, அதிகாரம் போன்ற காரணங்களால் முரண்பாடுகள் விரிவடைந்து, தனி வீரர்கள்- ராணுவப் பிரிவினர் தோன்றி, அரசுகள் நோக்கிப் பயணமான காலத்தை வீரயுகம் என்று குறிப்பிடலாம்.)
===================================
தமிழரது வீரயுகம் புராதன சுமேரியர், கிரேக்கர் முதலியோரின் வீரயுகங்களுடன் ஓருசேர வைத்து நோக்கும் பெருமையுடையது
க. கைலாசபதி
இது காலவரை தெரியவந்துள்ள வீரயுகங்களுள் காலத்தால் முந்தியது கிறித்துவிற்கு முன் மூவாயிரம் ஆண்டளவிலே மெஸொப்பொத் தோமியாவில் நிகழ்ந்த சுமேரிய வீரயுகமாகும். அதற்கடுத்தப்படியாகக் கிரேகத்தில் நிகழ்ந்த வீரயுகத்தைக் கொள்ளலாம். வட இந்தியாவில் இதிகாசங்கள் குறிக்கும் வீரயுகத்தையும் தவிர்த்தால், காலவரிசையில் அடுத்தப்படியாக அமைவது பழந்தமிழரது வீரயுகம் ஆகும். இது கிறித்துவிற்கு எழுநூறு ஆண்டுகள் முன்தொடங்கியிருக்கலாம். ஆயினும் பெரும்பாலும் கி.மு ஆறாம் நூற்றாண்டளவில் இது நிகழ்ந்தது எனக்கருதுவது பொருத்தமாகும். உலகின் பிறபகுதிகளிற் காணப்படும் வீரயுகங்களும் அவற்றைச்சேர்ந்த பாடல்களும் கிறித்துவிற்குப் பின் பல நூற்றாண்டுகள் கழிந்தே தோன்றின.அந்த வகையில், கால ஒழுங்கின்படி, தமிழரது வீரயுகம் புராதன சுமேரியர், கிரேக்கர் முதலியோரின் வீரயுகங்களுடன் ஓருசேர வைத்து நோக்கும் பெருமையுடையது எனலாம். (1968- 70,71)
க. கைலாசபதி
(பேராசிரியர் வீ. அரசு மேற்கோளாக குறித்தவை)
No comments:
Post a Comment