01/12/17, 5:32:44 PM: Rahul: நானாக தேடி இதை எல்லாம் படிப்பது கிடையாது. தானாக கண்ணில் படுகிறது என்ன செய்ய? :-)
சமீபத்தில் ஸ்பெயின் அருகே கண்டெடுக்கபட்ட 7000 ஆண்டுக்கு முந்தைய இரு உடல்கள் ஐரோப்பியருக்கு வெள்ளைதோல் உருவானதன் காலகட்டத்தை சுமார் 33,000 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளி உள்ளது.
காக்கேசியன் இனமான ஐரோப்பியர் நீலகண்கள், வெள்ளைத்தோல் மற்றும் பொன்னிறமுடி ஆகியவற்றால் மற்ற இனத்தவரிடம் இருந்து வேறுபடுவர். நீலக்க்ண்களின் காரணம் ஜெனட்டிக் மியூட்டேஷன் ஒன்று என கண்டறியபடுள்ளது. வெள்ளைதோலுக்கு காரணம் ஐரோப்பாவின் குளிரில் கோடையில் வைட்டமின் டீ கிடைக்காதது தான் காரணம் என விஞ்ஞானிகள் நம்பி வந்தனர்.
அதாவது வெள்ளைதோல் கருப்பு தோலை விட வெகுவிரைவில் வைட்டமின் டியை உற்பத்தி செய்யும். வெள்ளை தோல் உள்ளவர்கள் வெயிலில் 20 நிமிடம் நின்றால் வைட்டமின் டீ 25,000 யூனிட் வரை கிடைக்கும். கருப்பு தோல் உள்ளவர்கள் இதற்கு 40 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் பக்கம் வெயிலில் நிற்கவேண்டும். வெயில் அதிகம் உள்ள ஆசிய, ஆபிரிக்க பகுதிகளில் அதிக அளவில் உடலில் வெயில் படுவதால் ஸ்கின் கான்சர் வரும் வாய்ப்பு அதிகம். கருப்பு தோல் அதில் இருந்து பாதுகாக்கிறது. ஒப்பீட்டளவில் வெள்ளைதோலுக்கு கருப்பு தோலை விட எளிதில் ஸ்கின் கான்சர் தாக்கும். ஆக குளிர்பகுதிகளில் வெள்ளைதோல் இருப்பதும், வெயில் பகுதிகளில் கருப்பு தோல் இருப்பதும் பரிணாமரீதியாக புரிந்துகொள்ள கூடியது.
ஆனால் 7,000 ஆண்டுக்கு முன்பு கருப்புதோல், நீலகண்களுடன் கிடைத்த ஐரோப்பிய உடல்கள் இந்த கருத்தாக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தி உள்ளன. இந்த இரு உடல்களும் நார்வே பகுதியில் இருப்பவர்களுடன் மரபணுரீதியாக ஒத்துபோகிறது. வட ஐரோப்பியர்கள் தான் ஒப்பீட்டளவில் தெற்கு ஐரோப்பியர்களை விட வெள்ளைதோல் அதிகம் கொண்டவர்கள். இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது:
குளிர்பகுதி மட்டும் தோல் வெள்ளையானதற்கான காரணம் அல்ல
10,000 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட விவசாய புரட்சியால் மக்கள் உணவில் பெருமளவில் தானியங்கள் சேர்ந்தன. அதற்குமுன் மாமிச உணவில் ஏராளமான வைட்டமின் டீ குளிர்காலத்திலும் ஐரோப்பியருக்கு கிடைத்தது. அதனால் சூரிய ஒளியால் வைட்டமின் டீ பெறும் அவசியமே அவர்களுக்கு இருக்கவில்லை. விவசாயத்துக்கு மாறியதும்
தானிய உணவால் வைட்டமின் டீ பற்றாகுறை ஏற்பட்டு அதை சமாளிக்க அவர்கள் தோல் நிறம் வெள்ளையாக மாறியது!!!
என்ன கொடுமைனு பார்த்தீர்களா மக்களே..அழகா "கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" என இருந்திருக்கவேண்டிய ஐரோப்பியர்கள் தானிய உணவால் அழகில்லாத வெள்ளைகலருக்கு மாறிய கொடுமையை.
http://news.yahoo.com/7-000-old-human-bones-suggest-date-light-190422120.html
No comments:
Post a Comment